Bahan Mudah Lulus Untuk UPSR

Close Learning in the Cloud! Cloud Computing for Teachers & Schools

UPSR தமிழ் மொழி

PSS SJK(T) KERUH

சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்

Sunday, August 25, 2013

இன்னும் ஓரிரு வாரங்களில் யூபிஎசார் தேர்வில் தமிழ்மொழித் தாள் 2 –ஐ அணுகவிருக்கும் மாணவர்களும் கற்பிக்கும் ஆசிரியர்களும் கவனிக்க வேண்டிய முக்கியக் கூறுகள்.




  வணக்கம்இன்னும் ஓரிரு வாரங்களில் யூபிஎசார் தேர்வில்அமரவிருக்கும் மாணவர்களும் தமிழ் மொழி போதிக்கும் ஆசிரியர்களும்அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விடயங்களைப் பகிர்ந்து கொள்ளவிரும்புகின்றேன்ஒரு சில யூபிஎசார் பட்டறைகளால் மாணவர்களும்ஆசிரியர்களும் தேர்வு காலம் நெருங்கும் தருவாயில் பல குழப்பத்திற்குஆளகி வருவதால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஓர் ஆரோக்கியமானசூழல் ஏற்படாமல் போய்விடுமோ எனும் அச்சத்தில் இவ்விளக்கங்களைஉங்களிடம் பகிர்கிறேன்.
           மாணவர்கள் செய்யும் பிழைகளைப் பற்றிப் பேசுகையில் நாம்இங்கு தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்அதுதான் பிழை,தவறு ஆகிய இவற்றிடையே உள்ள வேறுபாடாகும்.


     பிழை எனப்படுவது மொழியமைப்பினையோ அல்லதுவிதிகளையோ அறியாத காரணத்தால் தோன்றுவதுதவறு என்பதோகவனக்குறைவுகளைப்புகருத்து நாட்டமின்மைஞாபக மறதி,அக்கறையின்மை ஆகிய காரணங்களால் அமைவது ஆகும்.


               வகுப்பறைச் சூழலில் மட்டுமல்லாமல் மாணவர்கள்சுயக்கற்றலின் அடிப்படையில் இத்தகைய பிழைகளைத் திருத்திக்கொள்ளலாம்இதுவே தேர்வு நெருக்கத்தில் மாணவர்கள் செய்யவேண்டியதாகும்.எழுத்துகளைக் கவனித்து நிறுத்தி எழுதும்படி செய்தல்,உருவாக்கிய வாக்கியங்களையோ கட்டுரையையோ மீண்டும் வாசித்துப்பார்க்கச் செய்தல்சகதோழர்களை வாசிக்கச் செய்தல் போன்ற பல்வேறுபொருத்தமான நடவடிக்கைகளின் வழி தவறுகளைக் குறைக்கலாம்.


  பொதுவாக மாணவர்கள் செய்யும் பிழைகள் பலவகைப்படும்.எழுத்துப்பிழைசொற்பிழைஇலக்கணப் பிழைகருத்துப் பிழை என்றுமாணவர்கள் பல்வேறு பிழைகளைச் செய்கின்றனர்மொழியியல்அடிப்படையில் மாணவர்கள செய்யும் பிழைகள் பின்வருமாறு:


1.   ஒலியியற்பிழைகள்


குறில் – நெடில் பிழைகள்


ல்-ற்-ழ் பிழைகள்


ர்-ற் பிழைகள்


ண்-ன்-ந் பிழைகள்


இனவெழுத்துப் பிழைகள்


ட்-த்-ற் பிழைகள்



2.   சொல்லியற்பிழைகள்


பெயர்ச்சொல் : வேற்றுமை உருபு தொடர்பான பிழைகள்


இடைச்சொல் தொடர்பான பிழைகள்



3.   புணரியற்பிழைகள்


வலிமிகும் இடங்கள் (தேவையான இட்த்தில் வல்லொற்றுஇன்றி எழுதுதல்)


வலிமிகா இடங்கள் (தேவையில்லா இட்த்தில் வல்லொற்றுஇட்டு எழுத்துதல்)


புணர்ச்சி விதிகளைத் தவறாகப் பயன்படுத்துதல்.


4.   தொடரியற்பிழைகள்


எழுவாய் – பயனிலை இயைபு இன்மை (தினைபால்எண்,இடங்களில்)


வாக்கியங்களைப் பிழையாக அமைத்தல்.


முற்றுப் பெறா வாக்கியங்கள்.



5.   பொருளியற்பிழைகள்


இரு பொருள்பட அமைந்த வாக்கியங்கள் அல்லது தவறானபொருள் தரும் வாக்கியங்கள்.


6.   வரிவடிவப் பிழைகள்


புள்ளி இடாமல் எழுதுதல் / தேவையின்றி புள்ளியிட்டுஎழுதுதல்


எழுத்தை விட்டுவிடுதல் / எழுத்தைக் கூடுதலாக சேர்த்தல்.

\
ஓர் எழுத்துக்குப் பதில் மற்றோர் எழுத்தைப் பயன்படுத்துதல்.


சொல்லை இடம் மாற்றி எழுதுதல்.


7.   பேச்சுத் தமிழ்ப் பிழைகள்


வழிகாட்டிக் கட்டுரையில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் திறந்தமுடிவுக் கட்டுரைகளில் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதைமறந்தெழுதுதல்.



8.   நிறுத்தக்குறிப் பிழைகள்



குறிப்பாக  யூபிஎசார் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களில் C,D,Eநிலையில் உள்ளவர்கள் மேலேயுள்ள குறைகளைக் காண்டறிந்து,சுட்டிக்காட்டி தெளிவுபடுத்துவதன் வழியும் மேலே நான் கூறியது போலஉருவாக்கிய வாக்கியங்களையோ கட்டுரையையோ மீண்டும் வாசித்துப்பார்க்கச் செய்தல் மூலமும் சகதோழர்களை வாசிக்கச் செய்தல்வழியாகவும் ‘D’ ‘E’ மாணவர்களைக் காப்பாற்றலாம்.



வாக்கியம் அமைத்தல் பகுதியில் மாணவர்களுக்கும்ஆசிரியர்களுக்கும் நான் ஏற்கனவே என்னுடைய முந்தைய பதிவில்அட்டவணைக் கருவி மூலம் வாக்கியம் அமைத்தலைஅறிமுகப்படுத்தியிருந்தேன்.  அதனை அமைக்கும் விதத்தையும்விளக்கியிருந்தேன்பல ஆசிரியர்கள் அதனைப் பயன்படுத்தி எளிமையாகவாக்கியம் அமைக்க முடிகிறது என எனக்கு மின்னஞ்சல் அனுப்பி நன்றிதெரிவித்தனர்அத்தகைய உத்தியை பயன் படுத்தினாலே போதும்முடிந்தஅளவுக்கு நாம் இப்பிரிவை எளிமைப்படுத்திக் கொள்ளலாம்இருப்பினும்,நான் ஒரு சில பள்ளிக்கூடங்களில் பட்டறை நடத்தும் போதுவேறு சிலதவறான புரிதல்களால் ஆசிரியர்களும் மாணவர்களும் பயங்கரமாகப்குழப்பப்பட்டுள்ளர்கள் என அறியப்பெற்றேன்இப்பிரிவில் மாணவர்கள்விளக்கச் சொல்லைப் பயன்படுத்தி வாக்கியம் அமைத்தாலே போதும்.இப்பிரிவின் எதிர்பார்ப்பு என்னவென்றால் மாணவர்கள்கொடுக்கப்பட்டிருக்கின்ற சொல்லை முழுமையாக விளங்கிக்கொண்டார்களா என்பதை அறியவே ஆகும்அதனை உறுதிப்படுத்தவேவிளக்கச் சொல் பயன்படுத்த வேண்டும் எனக்  கட்டாயப்படுத்தப்படுகிறது.மெதுபயில் மாணவர்கள் எழுவாய் பயனிலை செயபடுபொருள் அடங்கியமுழுமையான வாக்கியத்தை விளக்கச் சொல் புகுத்தி வாக்கியம்அமைத்தாலே போதும்புள்ளிகள் குறைவாக கிடைக்கப்பெற்றாலும்பிழையில்லாமல் இருப்பதே சிறந்ததுவிளக்கச் சொல் சரியாகப்புகுத்தப்பட்டுள்ளதா என்பதை கீழ்கண்டவாறு உறுதி செய்து கொள்ளலாம்:
           
   வழிகாட்டிக் கட்டுரை என்று சிந்திக்கும் போது மாணவர்கள் தத்தம்அனுபவங்களையும் ஞாபகசக்தியையும் பின்னோக்கிப் பார்க்கவேண்டியுள்ளதுஇந்த ஆற்றல்களைத் தூண்டி பொருத்தமானவினாக்களைக் கேட்பதன் வழி அனுபவங்களாக வழிகாட்டலுக்கேற்ப(படத்திற்கேற்பவெளிப்படுவதை நல்ல சொல்லாட்சிவர்ணனை ஏற்றநிறுத்தக்குறிஎழுத்துப்பிழையின்மைகவரும் வாக்கியங்களுடன்எழுதுதலையே இப்பிரிவின் எதிர்பார்ப்பு ஆகும்மெதுபயில் மாணவர்கள்சில கேள்விகள் கேட்டுப் பார்ப்பதன் வழியோஆசிரியர் கேட்பதன் வழியோஎழுதுவதற்குத் தேவையானவைகள் பதிலாகத் தங்களின் தரத்திற்கேற்பமனத்திலிருந்து வெளிப்படும்அதற்கு சில வினாக்களைப் பயன்படுத்தலாம்,
மெதுபயில் மாணவர்களுக்கென ஒரு சில கதை வர்ணனைகளை சூழலுக்கேற்ப எல்லா வழிகாட்டிக் கட்டுரைக்கும் பயன்படுத்தலாம்:
காலை நேரம்
கிழக்கில் சூரியன் உதித்ததும் இலைகளில் தங்கியிருந்த பனித்துளிகள் மெல்ல மறையத் துவங்கின. சூரியனின் ஒளிக்கதிர்கள் வானத்தைப் பிளந்து கொண்டு கண்களில் பாய்ந்தன. கொக்கரக்கோ என்ற சேவலின் உரத்த கூவல் பொழுது விடிந்ததை உணர்த்தியது(மூலம்: BAHAN P&P KSSR DAN KBSR FB)
மதிய நேரம்
உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதற்கொப்ப அந்நேரத்தில் நிழலைத் தேடியே பலரின் கால்கள் நடைப்போட்டன. (மூலம்: BAHAN P&P KSSR DAN KBSR FB)
மாலை நேரம்
மேற்கில் வெயில் மறைந்து கொண்டிருந்த நேரம். சூரியன் தன் முகத்தை ஒளித்துக் கொண்டிருந்தது. வானத்திலிருந்து இருள் மெதுவாக இறங்கியது.(மூலம்: BAHAN P&P KSSR DAN KBSR FB)
இரவு நேரம்
நிசப்தமான நேரம். பரந்து விரிந்திருந்த வான் முழுவதும் விண்மீன் கூட்டங்கள் பெரியவையும் சிறியவையுமாய் நிறைந்து கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. வெளிச்சம் மங்கிய வேளையில் காயும் நிலா ஒளி எங்கும் பரவியிருந்தது. இரவு பூச்சிகளின் ரீங்காரம் இனிமையான இசையைப் போல கேட்டுக் கொண்டிருந்தது. தூரத்தில் எங்கோ நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. (மூலம்: BAHAN P&P KSSR DAN KBSR FB)
திடல்
விசாலமான புல்வெளி. கருமை நிறத்திலான காலை நேர பனிமேகம் தான் அளவில்லா ஆசைகொண்ட புல்வெளியிடமிருந்து பிரிய மனமின்றி அழுதுகொண்டிருக்கிறது. சிந்திய பனித்துளிகளை தன் நுனி உடம்பில் வைத்திருந்தன பச்சை நிறப் புற்கள். தன் கடமையினை நேரந்தவராது செய்யும் கதிரவன் அடிவானிலிருந்து சமூகளிக்கிறான் . கதிரவனைக் கண்டதும் பனித்துளிகள் எங்கோ ஓடி மறைந்தன. (மூலம்: BAHAN P&P KSSR DAN KBSR FB)
வகுப்பறை
மாணவர்கள் அனைவரும் அவரவர் வேளையில் மூழ்கியிருந்தனர். முகிலன் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தான். மாணவர்களின் புத்தகப்பை அனைத்தும் வாய்ப் பிளந்து கிடந்தன. (மூலம்: BAHAN P&P KSSR DAN KBSR FB)
சாலை
வாகனங்களின் பீங்ங்ங்ங்’ எனும் ஹார்ன் சத்தம் எங்கும் எதிரொலித்தது. வாகனங்கள் இரயில் போல வரிசையாகச் சென்று கொண்டிருந்தன.(மூலம்: BAHAN P&P KSSR DAN KBSR FB)
திறந்த முடிவுக் கட்டுரையில் கருத்து விளக்கக் கட்டுரையாகவும்அமைப்பு முறை கட்டுரையாகவும் கற்பனை மற்றும் தன்கதையாகவும்கேள்விகள் கேட்கப்படுகின்றன.
கருத்து விளக்கக் கட்டுரை எழுத வேண்டுமெனில் மாணவர்கள்முதலில் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பின் கருத்தை நன்கு விளங்கிக்கொண்டிருக்க வேண்டும்அதுவே இப்பிரிவின் எதிர்பார்ப்பு ஆகும்அப்படிவிளங்கிக் கொண்டு தலைப்பையொட்டி மூன்று அல்லது  நான்குகருத்துகளை விளக்கி எடுத்துக் காட்டுகளுடன் எழுதினால் அதிக புள்ளிகள்பெறலாம்மெதுபயில் மாணவர்கள் 3 கருத்துகளை விளக்கி சிறு சிறுவாக்கியங்களில் எழுதினாலே போதும்இன்னும் இருக்கின்ற ஓரிருவாரங்களில் மாணவர்கள் கருத்து விளக்கக் கட்டுரைகளை நிறையவாசித்து கருத்துகளை எப்படி உதாரணங்களுடன் விவரித்து எழுதலாம்எனும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்ஆசிரியர்களும் எதிர்பார்க்கப்படுகின்ற தலைப்புகளை யொட்டிஒரு மனவோட்டவரை போட்டு விளக்குவது இரு தரப்பு மாணவர்களுக்கும்நற்பயனாக இருக்கும்மாணவர்களை முன்னுரை மட்டும் அமைத்துக்காட்டச் சொல்ல்லாம். 20 நிமிடத்தில் 5 அல்லது ஆறு முன்னுரைகளைவெவ்வேறு தலைப்புகளுக்கு அமைத்துக் காட்டச் செய்யலாம்அதுபோலவே கருத்துகளுக்கும் முடிவுரைகளுக்கும் செய்யச் சொல்லி வகுப்பில்ஒவ்வொருவரும் பகிர்ந்து கொள்வதால் அனைவருக்கும் பயனாகஅமையும்மெதுபயில் மாணவர்களும் பயன்பெறுவர்.
கற்பனை மற்றும் சுயசரிதைகள் பெரும்பான்மையான மாணவர்கள்விரும்பி எழுதும் ஒன்றாக திகழ்கிறதுகற்பனைக் கட்டுரைகள்எழுதுவதற்கென மாணவர்களுக்கு எதிர்கால சிந்தனை மிகவும் அவசியம்.காரணம் மாணவர்கள்  எதிர்கால சிந்தனையும் கற்பனையும் இருந்தால்மட்டுமே சிறந்த கற்பனைக் கட்டுரையைப் படைக்க இயலும்.
சுயசரிதையில் உயிரற்ற பொருளே தலைப்பாக அமையும்இதுதன்கதையாக இருந்தாலும்கதை எழுதும் களமாக இது கருதப்படாது.மாணவர்கள் தன்னைப் பற்றிய சுய விளம்பரமாகவே இக்கட்டுரையைப்படைக்க வேண்டும்மனிதக் கூறுகள் புகுத்தப்பட்ட ஒரு உயிரற்ற பொருள்மனித உணர்ச்சிகள் பெற்று வாழும் வாழ்க்கையை இங்கு விமர்சிப்பதற்கேபுள்ளிகள் வழங்கப்படும் என்பதை கட்டாயம் அறிந்து எழுத வேண்டும்.மெதுபயில் மாணவர்கள்இதையரிந்து சிறு சிறு வாக்கியங்களில்எழுதினாலே போதும்.
எஞ்சி இருக்கின்ற இந்த இரு வாரங்களில் மாணவர்கள் மேலேஉள்ள அனைத்து விவரங்களையும் பின்பற்றி வந்தாலே போதுமானது.வீண்குழப்பங்களும் நம்பிக்கையின்மையும் மாணவர்களை எழுதவிடாமல்ஆக்கிவிடும்ஆகவே அனைத்தையும் செய்து முடித்து விடலாம் எனும்நம்பிக்கையே ஒரு மாணவனை வெற்றியடைய செய்யும்கேட்பதைவிதிமுறைகளுக்கேற்ப படைத்துவிட்டால் வெற்றி நிச்சயம்!
முறையான பயிற்சியும் முயற்சியுமே நல்ல தேர்ச்சியைக்கொடுக்கும்மேல் விபரங்களுக்கு தவறாவல் என்னைத் தொடர்புக் கொள்க.நன்றி.
 நன்றி தமிழினியன்

Post Comment

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...