Bahan Mudah Lulus Untuk UPSR

Close Learning in the Cloud! Cloud Computing for Teachers & Schools

UPSR தமிழ் மொழி

PSS SJK(T) KERUH

சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்

Sunday, March 6, 2011

ஒரு சமூகம் உயிர்த்துடிப்புடன் திகழ்வதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு



ஒரு சமூகம் உயிர்த்துடிப்புடன் திகழ்வதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு மகத்தானது. சமூகத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் ஆசிரியர்களின் நேர் நடத்தைகளும் எதிர் நடத்தைகளும் காரணமாக அமைந்துவிடுவது மறுக்க முடியாத உண்மையே.
எனவே, ஆசிரியரின் முக்கியத்துவத்தினையும் ஆசிரியத்துவத்தின் மேன்மையினையும் நாம் நன்குணர்ந்து செயலாற்ற வேண்டியது அவசியம்.
உலகிலேயே சேவைகளில் எல்லாம் மிக உன்னதமான சேவை கற்பித்தலேயாகும். கற்பித்தலில் ஈடுபடும் ஒவ்வொரு ஆசிரியரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது இன்றியமையாதது. கற்பித்தலைப் பொறுத்தமட்டில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்பதை ஆசி ரியர்கள் மட்டுமன்றி மாணவர் கள், அதிகாரிகள், பெற்றோர் உட் பட சகலரும் ஏற்றுக் கொள்கின்ற னர்.
ஆசிரிய சேவையில் ஈடுபடு வோர் அதன் புனிதத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். வெற்றிகர மான கற்பித்தலுக்கு தெளிந்த மனமும் சிறந்த ஆளு மையும், அர்ப்பணிப்பும் அவசியம். இவற் றைத் தரவல்லது ஆசிரியர்களின் நேர் நடத்தைகளே ஆகும். எனவே, அவர்கள் அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர்களது முன்மாதிரியான நடத்தைகள் மூல மாக சிறப்பான மாணவச் சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை ஆசிரியர்கள் கட்டாயம் உணர வேண்டும். தொடர்ந்து வாசிக்க இங்கே சொடக்கவும்

Post Comment

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...